Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முக்குணத்தான் மூடரா மாந்தர் முயல்கரும
மக்குணத்து நாளு மமர்வுறுவர்-மிக்க
வறிவுடையாரல்லாரை யாங்கசைவு செய்யார்
செறிவுடைய ஞானத்திற் சேர்ந்து.        3.22

முக்குணத்தால்

மூன்று குணங்களால் (ஸத்வம், ரஜஸ், தமஸ்)

மூடராம் மாந்தர்

ஆத்மாவை அறியாமல் மயங்கிநிற்கும் மனிதர்

அக் குணத்து முயல் கருமம்

அவ்வக்குணங்களால் உண்டாகும் கருமங்களில்

நாளும் அமர்வுறுவர்

எப்போதும் ஈடுபடுவர்

மிக்க அறிவுடையார்

ஆத்ம ஸ்வரூபத்தை முழுவதும் அறிந்தவர்கள்

செறிவுடைய ஞானத்தில் சேர்ந்து

(ஆத்மாவைப் பற்றிய) இடைவிடாத சிந்தனமாயிருக்கும் ஞானயோகத்தைத் தாம் அனுஷ்டிப்பதன் மூலம்

அல்லாரை

ஆத்ம ஸ்வரூபத்தை முழுதும் அறியாதவர்களை

ஆங்கு

அவர்கட்குரிய கர்மயோகத்தினின்றும்

அசைவு செய்யார்

நழுவச் செய்யமாட்டார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top