Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காயத்தா னெஞ்சாற் கருத்தமரும் புத்தியான
மாயத்துச் சேரா வரும்புலனா -னேயத்து
நீக்கத் துடன்கரும நின்றியல்வர் யோகியர்க
ளூக்கத் துளந்தெளிவை யுற்று.    5.10

யோகியர்கள்

கர்மயோகிகள்

நேயத்து நீக்கத்துடன்

சுவர்க்கம் முதலான பலன்களில் பற்றைவிட்டு

உளம் தெளிவை உற்று

உள்ளிருக்கும் ஆத்மாவானது ப்ராசீந கர்மங்களினின்றும் விடுபட்டுத் தெளிவடைவதற்காக

காயத்தால்

உடம்பாலும்

நெஞ்சால்

மனத்தாலும்

கருத்து அமரும் புத்தியால்

அறிவு ஊன்றியிருக்கையாகிற உறுதியாலும்

மாயத்துச் சேரா அரும் புலனால்

எனது என்னும் மயக்கத்துக்கு விஷயமாகாத அரிய இந்திரியங்களாலும்

கருமம்

கர்மங்களை

ஊக்கத்து நினறு இயல்வர்

ஊக்கத்துடன் நின்று செய்வார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top