Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வெறுப்புநசை யற்றவவன் விட்டவனா மென்றும் 
பொறுப்புடனே தன்னிருமை பூண்ட-செறுப்பகற்றி
நின்றான் விசயனே நீள்வினையின் கட்டுவிட்டுச்
சென்றான் சுகத்துச் சிறந்து.      5.3

விசயனே!

அர்ஜுனா!

நசை வெறுப்பு அற்ற அவன்

(விஷயங்களில்) பற்றும்,(அதைத் தடுப்பாரிடம்) துவேஷமும் இல்லாதவனாய்

(அதனாலேயே) பொறுப்புடனே

பொறுமை யுடன்

தன் இருமை பூண்ட செறுப்பு அகற்றி

(இன்பம் துன்பம் முதலான) இரட்டைகளால் தனக்கு உண்டாகும் கிளர்ச்சியைப் போக்கி

நின்றான்

(கர்மயோகத்திலேயே) நிலை நின்றவன்

என்றும் விட்டவனாம்

என்றும் கர்மயோகத்தை விட்டுச்செய்யும் ஞானயோகத்தில் நிலைநிற்பவனேயாவான்

சுகத்து சிறந்து

(அவன்) எளிதிலும் நன்றாகவும்

நீள் வினையின் கட்டு விட்டு சென்றான்

அநாதியான கர்மங்களினால் ஏற்படும் கட்டு நீங்கப்பெறுகிறான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top