Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இதுகாண் பிரமமெனு மிவ்வுயிரின் றன்மை 
யிதுகாண் பெறின்மயக்க மெய்தா – னிது தன்னி 
னந்தகா லத்தமர்ந் தப்பிரமா னந்தமெனுஞ் 
சந்தமாந் தன்மை பெறும்.         2.64

இது

முற்கூறியபடி ஜ்ஞாநயோகத்தை அடைவதற்காக ஆத்ம தத்வஜ்ஞானத்தை முன்னிட்டுக்கொண்டு பற்றற்ற கர்மத்தில் நிலைநிற்கும் இதுவே

பிரமம் எனும் இவ்வுயிரின் தன்மை காண்

ப்ரஹ்மம் எனப்படும் ஜீவாத்மாவை அடைவிக்கும் உபாயமாயிருப்பது

இது

இக்கர்மயோகத்தை

பெறின்

அடைந்தானாகில்

மயக்கம் எய்தான் காண்

(மனிதன்) ஸம்ஸார மயக்கத்தை அடையமாட்டான் கண்டாய்

இது தன்னின்

இக்கர்மயோகத்தில்

அந்த காலத்து அமர்ந்து

ஆயுளின் கடைசிப்பகுதியில் நிலைநின்றாலும்

அப் பிரமானந்தம் எனும்

ப்ரஹ்மமாகிற ஆத்மாவை அனுபவித்து ஆனந்தப்படுகையாகிற

சந்தமாம் தன்மை பெறும்

சிறந்த நிலையை (மனிதன்) அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top