Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எவ்வளவி னின்மோகத் திற்கலக்க மாமிதனை
யிவ்வகையே புந்தி யெழக்கடக்கு மவ்வளவிற்
கேத மருவுதிநீ கேட்பதிலுங் கேட்டதிலு
மேத மிகும்பயனா மென்று.          2.48

எவ்வளவில்

எந்த சமயத்தில்.

நின் புந்தி

உன் அறிவு

மோகத்தில் கலக்கமாம் இதனை

மாறுபட்ட அறிவாகிற இக்கலக்கத்தை

இவ்வகையே

(முற்கூறிய) கர்மயோகத்தாலே

எழ கடக்கும்

நன்றாகத் தாண்டுமோ

அவ்வளவில்

அந்த சமயத்தில்

நீ

நீ

கேட்டதிலும்

இதுவரை கேட்ட தான அற்ப பலன்களைப்பற்றியும்,

கேட்பதிலும்

இனிக் கேட்கப்போகிற அற்பப்பலன்களைப்பற்றியும்

ஏதம் மிகும் பயனாம்' என்று

‘துன்பம் நிறைந்த பலன்களே இவை’ என்று

கேதம் மருவுதி

வெறுப்பை அடையப்போகிறாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top