Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எங்கு நிறைநீ ரெழிற்றடத்து யாவர்க்கு
மிங்கு மருவுபய னெவ்வளவா – மங்கனைத்து
வேதத்து மந்தணற்கு வேண்டுபய னவ்வளவாம்
போதத்துக் கீடாப் புணர்ந்து.          2.42

இங்கு

இம்மையில்

எங்கும் நிறை நீர் எழில் தடத்து

நாற்புறத்திலும் நீர்நிறைந்த அழகிய நீர்நிலையில்

யாவர்க்கும்

(அதனால் பயனடைய விரும்பும்) அனைவர்க்கும்

மருவு பயன் எவ்வளவாம்

உண்டாகும் பயன் எவ்வளவோ

அங்கு

மறுமையில்

அனைத்து வேதத்தும்

எல்லா வேதத்திலும்

அந்தணற்கு

வேதத்தில் நிலை நின்றவனுக்கு

போதத்துக்கு ஈடா புணர்ந்து வேண்டு பயன்

(மோக்ஷத்தை விரும்பும் தன்) அறிவுக்குச்சேர ஆசைப்பட்டுக் கைக்கொள்ளும் பயன்

அவ்வளவாம்

அவ்வளவேயாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top