Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நின்று நீ செய்யு நியதக் கருமத்தை
யென்றுமிது மற்றறிவி லேற்றமுடைத் – துன்ற
னுடனடப்பு மோடா தொருகரும மற்றா
லடலடர்த்த தோளா யறி.      3.6

நியதக் கருமத்தை

அநாதிகாலமாகப் பழகிப்போந்த கர்மங்களை

நின்று நீ செய்

நீ நிலையாகச் செய்வாய்

என்றும்

எப்போதுமே

இது

இக்கர்மயோகம்

மற்று அறிவில்

இதனிலும் வேறுபட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்

ஏற்றம் உடைத்து

சிறப்பை உடையது

ஒரு கருமம் அற்றால்

(நீ) ஒரு கருமத்தையும் செய்யாவிடில்

உன்றன் உடல் நடப்பும் ஓடாது

உன்னுடைய தேஹம் தரித்து நிற்பதும் நடைபெறாது

அடல் அடர்த்த தோளாய்

எதிரிகளை வென்ற தோளையுடையவனே!

அறி

இதை அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top