Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இட்டத்தாற் கன்மத் திழியார் வினையொழியார்
விட்டத்தாற் பேறதனை மேலடையார் – தொட்டொன்றைச்
செய்யாரிறைப்பொழுது நில்லார் செறிந்தியல்வர்
மெய்யார் குணத்தெவரு மிக்கு.      3.3

இட்டத்தால்

தம் விருப்பப்படி,

கன்மத்து இழியார்

கர்மயோகத்தைத் தொடங்காமலிருப்பவர்கள்

வினை ஒழியார்

(ஞானயோகவிரோதியான) பாபங்கள் நீங்கப்பெறார்கள்; (ஆகையால் ஞானயோகத்தை அடையமாட்டார்கள்)

விட்டத்தால்

(தொடங்கிய கர்மயோகத்தைக்) கைவிட்டதாலும்

பேறு அதனை

அந்த ஞானயோகத்தை

மேல் அடையார்

மேல்வரும் காலத்தில் பெறமாட்டார்கள்.

இறைப்பொழுதும்

ஒரு கணநேரமும்

ஒன்றைத் தொட்டுச் செய்யார்

ஒரு கர்மத்தைத் தொடங்கிச் செய்யாமலிருப்பவர்கள்

நில்லார்

இருக்கமுடியாது

எவரும்

எந்த மனிதரும்

மெய் ஆர் குணத்து

பிரகிருதிகார்யமான சரீரத்திலுள்ள ஸத்வரஜஸ்தமோகுணங்களில்

செறிந்து

அழுந்தி

மிக்கு இயல்வர்

(அந்த குணங்களுக்குரிய) செயல்களில் (தம்மையறியாமலே) மிகவும் ஈடுபட்டே தீருவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top