Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சோகிக்க லாதவற்றைச் சோகித்தாய் தொல்லறிவி
லாகப் படிபகர்வ தாகின்றாய் – யோகத்தான்
மாயு முயிர்களையு மாயா வுயிர்களையு
மாயுமவர் சோகியா ராங்கு.      2.11

சோகிக்கலாதவற்றை

வருந்தத்தகாதவற்றைக் குறித்து

சோகித்தாய்

வருந்தினாய்

தொல் அறிவிலாக படி பகர்வது ஆகின்றாய்

பழைமையான சாஸ்திரஜ்ஞானத்தின் காரணமாக வரும் வார்த்தைகளைப் பேசுகின்றாய்

யோகத்தால்

(உத்பத்தி விநாச) யோகத்தால் மாயும்

உயிர்களையும்

அழியும் உயிர்களையுடைய உடல்களையும்

மாயா உயிர்களையும்

அழியாத ஆத்மாக்களையும்

ஆயுமவர்

ஆராய்ந்தறியுமவர்

ஆங்கு

அவ்விரண்டின் விஷயமாகவும்

சோகியார்

வருந்தமாட்டார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top