Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தொழப்படுமே லோரைத் தொலையா துலகி
லெழப்படுத னன்றே யிரப்பில் – விழப்படுத்தி
வாய்ந்த பொருள் காமித்த மற்றவரை யக்குருதி
தோய்ந்ததுவோ போகத்தின் றுய்ப்பு.   2.5

தொழப்படும் மேலோரை

(நம்மால்) வணங்கப்படுகிற பெரியவர்களை

தொலையாது

அழிக்காமல்

உலகில்

இவ்வுலகில்

இரப்பில் எழப்படுதல் நன்றே

பிச்சையெடுத்து அழிந்தொழிவது நல்லதே

மற்று வாய்ந்த பொருள் காமித்த அவரை

அப்படியல்லாமல் தமக்கு வாய்த்த பொருளை மிக விரும்பும் அவர்களை

விழப்படுத்தி

(போரில்) விழும்படியாக அழித்து

அக்குருதி தோய்ந்ததுவோ

அவர்களுடைய ரத்தத்தைத் தோய்த்து உண்பதோ

போகத்தின் துய்ப்பு

போகத்தின் அனுபவமாகும்?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top