Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்த வகையமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.    0.13

ஆய்ந்து மானம் தரும் இயல்வால்

ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி

இந்த வகை அமைந்த யோகங்கள் இம்முன்றும்

இப்படிப்பட்ட தன்மைகளையுடைய இந்த மூன்று யோகங்களும்

தந்தம் இடையே தனித்தனி சேர்

ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித்தனியாகக் சேர்ந்திருப்பதன்மூலம்

அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே

அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்

[10.11.12.13-பாட்டுகள். இந்நூலின் கடைசியில் எடுக்கப்போகிற கீதார்த்தங்கரஹம் 23, 24-சுலோகங்களின் தமிழ்மொழி பெயர்ப்பாகும்.]

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top