Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசித்திறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.    0.9

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில்வரும்

கர்மயோகம் ஞானயோகம் பக்தியோகம் ஆகிய இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்

சித்து அசித்து இறையோன் மாட்சி

சேதனம் (ஸூக்ஷ்ம ஸ்தூலரூபமான) அசேதனம் ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை

அருமை அற

சிரமம் இல்லாமல்

என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த

என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபனிஷத்தின்

பின் ஆறு ஓத்து

பின் ஆறு அத்தியாயங்களும்

பெயர்ந்து ஓதும்

(முன்சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்

[இது மேலெடுத்த கீதார்த்தஸங்க்ரஹம் நாலாம் ச்லோகத்தின் மொழிபெயர்ப்பு.]

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top