Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வென்றியமர் வில்லாளர் வீமன் விசயனென
நன்றியமர் தன்னு ணலம்புனை வோர்- நின்றிகல்வோன்
வெல்லும் விராடன் மிகுதேரான் பாஞ்சாலன்
சொல்லு மளவோ தொகை.   1.4

வீமன் விசயன் என

பீமனையும் அர்ஜுனனையும் போலே!

வென்றி அமர் வில்லாளர்

வெற்றிபொருந்திய வில்லாளிகள்

நன்றியமர் தன்னுள் நலம் புனைவோர்

நல்ல போரிலே வீரத்தைக் காட்டவிருக்கிறார்கள்

நின்று இகல்வோன்

நிலை நின்று போர்புரிபவன் (யுயுதானன்) என்னும் பெயருடைய ஸாத்யகியும்

வெல்லும் விராடன்

வெற்றியேகாணும் விராடனும்

மிகுதேரான் பாஞ்சாலன்

சிறந்த தேராளியான பாஞ்சாலவரசனும் (உளர்)

தொகை சொல்லும் அளவோ?

அவர்களுடைய எண்ணிக்கை சொல்லக்கூடிய அளவோ

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top